தேடுதல்

இந்திய கர்தினால் Telesphore Placidus Toppo இந்திய கர்தினால் Telesphore Placidus Toppo  

இறைபதம் சேர்ந்த இந்திய கர்தினால் Telesphore Placidus Toppo

இராஞ்சி இந்திய ஆயர் பேரவையின் ஆராய்ச்சி மையம் மற்றும் கான்ஸ்டன்ட் லீவன்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 புதன்கிழமை மாலை இறைபதம் சேர்ந்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வடஇந்தியாவின் இராஞ்சி பெருநகரப் பேராயராக இருந்தவரும் முதல் இந்திய பழங்குடியின கர்தினாலுமாகிய கர்தினால் Telesphore Placidus Toppo அவர்கள் தனது 84ஆவது வயதில் அக்டோபர் 4 புதன் கிழமை இறைபதம் சேர்ந்தார்.

1984 முதல் 2018 வரை ராஞ்சி பெருநகர பேராயராக இருந்த 84 வயதான கர்தினால் Telesphore Placidus Toppo அவர்கள், 2003 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கிய மிஷன் பகுதியைக் குறிக்கும் வகையில், "சோட்டாநாக்பூர் தலத்திருஅவையின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர் என்றும், கத்தோலிக்க மக்களிடத்தில் அன்பும் நன்றியும் கொண்டவர் கர்தினால் டோப்போ என்று கூறியுள்ளார் இராஞ்சி மறைமாவட்ட துணை ஆயர் Theodore Mascarenhas.

இராஞ்சியில் உள்ள இந்திய ஆயர் பேரவையின் ஆராய்ச்சி மையம் மற்றும் கான்ஸ்டன்ட் லீவன்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 புதன்கிழமை மாலை இறைபதம் சேர்ந்தார் கர்தினால் Telesphore Placidus Toppo. 

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான இராஞ்சியில், பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தின் வழியாக பீகார் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டத்தினால் ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட டோப்போ அவர்கள், வடக்கு மறைப்பணி பகுதியிலிருந்து வந்த முதல் இந்திய பழங்குடியினராவார்.

1939ஆம் ஆண்டு Chainput மா நிலத்தில் பிறந்தகர்தினால் டோப்போ அவர்கள் குருக் (ஓரான்) பழங்குடியினத்தைச் சார்ந்தவர். இவரின் பெற்றோர் அம்புரோஸ் டோப்போ மற்றும் சோபியா சால்க்சோ ஆவர். ஜார்கானில் உள்ள கிராமப்புறத் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், அதன்பின் இராஞ்சியில் உள்ள புனித சேவியர் கல்லூரி, புனித ஆல்பர்ட் கல்லூரி ஆகியவற்றில் குருத்துவ படிப்பினையும், உரோமில் உள்ள உர்பானோ பல்கலைக் கழகத்திலும் பயின்றவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2023, 10:42