தேடுதல்

 நில அதிர்ச்சி நில அதிர்ச்சி  (ANSA)

துருக்கி மற்றும் சிரியாவில் துன்புறும் மக்களிடையே திருஅவை

இவ்வாண்டு பிப்ரவரியின் நில அதிர்ச்சிக்குப்பின் அவ்விடத்தில் தலத்திருஅவைகளும் காரித்தாஸ் அமைப்புகளும் தொடர்ந்து மீட்புப் பணிகளை ஆற்றிவருவது குறித்த ஏடு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிரியா மற்றும் துருக்கியில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இடம்பெற்ற பெரும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து அவர்களுக்கு ஆற்றிவரும் பணிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு.

சிரியா மற்றும் துருக்கியின் 2023ஆம் ஆண்டு பெப்ருவரி 6ஆம் தேதியின் நில அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்த பணிகள் குறித்த விவரங்களை ஓர் ஏடாக வெளியிட்டுள்ள கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான இந்த பெரிய நில அதிர்ச்சியின் பின்விளைவுகளையும், அவ்விடத்தில் தலத்திருஅவைகளும் காரித்தாஸ் அமைப்புகளும் தொடர்ந்து மீட்புப் பணிகளை ஆற்றிவருவதையும் குறிப்பிடுகிறது.

இங்குள்ள அவசரகாலப் பணிகள், அம்மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், சான்று பகர்தல், அவர்களின் மனவலிமை, மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கான பேராவல் ஆகிய அனைத்தையும் நேரடியாகக் காணும் காரித்தாஸ் அமைப்பு, இம்மக்களின் வாழ்க்கையால் தொடப்பட்டு உதவிகளை தொடர்ந்து ஆற்றிவருகிறது என்றார் இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Marco Pagniello.

துன்புறும் மக்கள் குறித்தும், அவர்களுக்கு ஆற்றும் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கும் இச்சிறு கையேடு, இவ்வுலகில் இன்னும் தொடர்ந்துவரும் பாராமுகம் குறித்தவைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் முயற்சியே எனவும் கூறினார் இத்தாலிய காரித்தாஸ் இயக்குனர்.

இவ்வாண்டு பிப்ரவரியில் இடம்பெற்ற நிலஅதிர்ச்சியால் துருக்கியில் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர், ஒரு இலட்சத்து 7ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, சிரியாவில் 6 முதல் எட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், 12 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2023, 16:39