தேடுதல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள்   (Wang PhotoGraphy)

சிக்கிம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலத்திருஅவை உதவி!

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு சிக்கிம் மறைமாவட்டம் உணவு, உடைகள், தண்ணீர் மற்றும் அவசரகால மருந்துகளை வழங்கி வருகிறது : Alex Gurung

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் தலத்திருஅவையின் பணியாளர்கள் மீடுப்புப் பணிகளிலும் மறுவாழ்வு வழங்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வெள்ளத்தில் 40 பேர் இறந்துபோனதாகவும், 76 பேரை இன்னும் காணவில்லை என்றும் யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த சிக்கிமில் உள்ள டார்ஜிலிங்கின்  Sole மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான அருள்பணியாளர் Alex Gurung அவர்கள், “இப்போது நிவாரண முகாம்கள் அல்லது பிற தற்காலிகத் தங்குமிடங்களில் வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை மீட்டெடுப்பதில் தங்களின் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப உதவுவதற்காக தன்னார்வலர்கள் சேறு நிரம்பிய வீடுகளை மீட்டெடுத்து வருகின்றனர் என்று கூறிய அருள்பணியாளர் Gurung அவர்கள், பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இப்பெருவெள்ளத்தால் 2,002 வீடுகளை அழிந்துள்ளது என்றும், 1,852 பேர் 19 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அம்மாநில அரசும் தெரிவித்துள்ளது.

தற்போதைய இறப்பு எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை உள்ளூர் மக்கள் அரசிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில்தான் உள்ளது, ஆனால் யாருக்கும் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றும்,  தீஸ்தா நதிக்கரையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த  புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் இப்பெருவெள்ளத்தில் இறந்தார்கள் என்பது குறித்து சரியான பதிவு எதுவும் இல்லாததால் இறப்பு  எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அங்குப் பணியாற்றிவரும் தன்னார்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 4, திங்களன்று, சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதால், சீனாவின் திபெத் மற்றும் இமயமலை நாடான நேபாளத்தின் எல்லையை ஒட்டிய மாநிலத்தில் உள்ள டீஸ்டா நதிப் படுகையின் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதன் விளைவாக இந்த அழிவு நிகழ்ந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2023, 14:25