திருஅவையின் அனைத்து புனிதர்கள் திருஅவையின் அனைத்து புனிதர்கள் 

அனைத்து புனிதர்கள் பெருவிழா - அருள்பணி கிளாடிஸ்

உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்" (எபி 13:7)
அனைத்து புனிதர்கள் பெருவிழா - அருள்பணி கிளாடிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் புனிதர்கள்  தூயவர்கள் என்று அழைக்கப்படும் இவர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விவிலியத்திலிருந்தே பதில் இருக்கின்றது. " உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்" (எபி 13:7) என்கிறார் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர். ஆம், நமக்கு இறைவாக்கைப் போதித்த புனிதர்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களுடைய வழியில் நடக்கவேண்டும். அதைத்தான் திருச்சபை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

எனவே இந்த நல்ல நாளில் அனைத்து புனிதர்கள் திரு நாள் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி கிளாடிஸ்.  தந்தை அவர்களை அனைத்து புனிதர்கள் திருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.  

அவனும் அவளும் புனிதராக மாறும்போது, என்னால் ஏன் புனிதராக மாறமுடியாது?" என்பார் தூய அகுஸ்தினார். அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இன்று, நாமும் புனிதர்களாக மாற இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி வாழ முயற்சிப்போம். நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளிடத்தில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்வோம். அதன்வழியாக புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறும் பேறுபெறுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2023, 14:07