தேடுதல்

மொசாம்பிக் பகுதி சிறார் மொசாம்பிக் பகுதி சிறார்  (AFP or licensors)

தெருவோரச் சிறாருக்குக் கல்வி வழங்கும் கத்தோலிக்க அமைப்பு

Sant'Egidio திட்டமானது ஆரம்ப கால 5 ஆண்டுக் கல்வியை 40 தெருக் குழந்தைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆப்ரிக்காவின் மலாவி, மொசாம்பிக், சாம்பியா மற்றும் தான்சானியா தலைநகரின் தெருக்களில் வாழும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், மலாவி அரசு மற்றும் அதன் பங்காளர்கள், சிறார் பிரச்சனைக்கு தீர்வு காண இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வலியுறுத்தியுள்ளார் பவுலோ ஜெர்மானோ.

அக்டோபர் 11 புதன்கிழமை லிலாங்வேயின் சிடெட்ஸியில் உள்ள நம்பிக்கையின் இல்லத் (Casa della Speranza) திறப்பு விழாவின் போது இவ்வாறு கூறியுள்ள சன் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பவுலோ ஜெர்மானோ அவர்கள், தெருவோர சிறாரின் பிரச்சனை மலாவியில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

Sant'Egidio சமூகம் என்ற வகையில், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நிறைவுசெய்வதே எங்கள் பணியாகும்" என்று கூறியுள்ள ஜெர்மானோ அவர்கள், "தெருவோரக் குழந்தைகள் எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள். அவர்களை எங்களால் கைவிட முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Sant'Egidio திட்டமானது ஆரம்ப கால 5 ஆண்டுக் கல்வியை 40 தெருவோரக் குழந்தைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

சன் எஜிதியோ அமைப்பின் பணி

ஆப்ரிக்காவின் மலாவியில் 15,000 மேற்பட்ட சிறார் தெருக்களில் வாழ்கின்றனர் என்றும்,  வறுமை, குடும்பச் சீர்குலைவு அல்லது எய்ட்ஸ் போன்றவற்றால் நாட்டில் ஏறக்குறைய  12 இலட்சம் சிறார் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது சன் எஜிதியோ என்னும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

அக்டோபர் 11 புதன்கிழமை பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி வெளியிட்ட தகவல்கள், வளர்ந்து வரும் உணவுப் பாதுகாப்பின்மையால் அதிகரித்து வரும் தெருவோரச் சிறார் எண்ணிக்கை, குடும்பங்கள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், வறுமையினால் சிறாரின் கல்வி இடைநிற்றலுக்கும், வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக அமைகின்றது என்று எடுத்துரைத்துள்ளது.

வறுமையினால் வாடும் தெருவோரச் சிறார் உயிர் பிழைப்பதற்காக குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள் என்றும், மேலும் சிலர் பிச்சை எடுத்தல், திருடுதல், போன்ற செயல்களைச்செய்து மாண்பிழந்து வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்களிலிருந்து சிறாரைக் காப்பதற்கான முன்முயற்சியாக, மலாவியின் தலைநகரான லிலோங்வேயில் தெருவோர குழந்தைகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் கல்வி கற்பதற்கும் ஒரு திட்டத்தை சன் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புத் துவங்கியுள்ளது.  (Fides)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2023, 11:02