பிரான்சின் Marseille நகர் மக்களின் நவநாள் செபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று திருத்தந்தையின் பங்கேற்புடன் நிறைவுறவிருக்கும் மத்தியதரைக்கடல் பகுதிக்கான கூட்டம் வெற்றியடைய பிரான்சின் Marseille நகர் மக்கள் நவநாள் செபம் ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
செப்டம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் Marseille நகரில் இடம்பெற உள்ள திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு தயாரிப்பாக இந்த ஒன்பது நாள் நவநாள் செபத்தை அறிவித்துள்ள அப்பெருமறைமாவட்ட கத்தோலிக்கர், மத்தியதரைக்கடல் பகுதி பிரச்சனை குறித்த கூட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி துவங்குவதுவரை இந்த நவநாள் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இந்த நவநாளை துவக்கிவத்து உரையாற்றிய Marseille பெருமறைமாவட்ட கர்தினால் Jean-Marc Aveline அவர்கள், மத்தியதரைக்கடல் பகுதியில் வாழும் மக்கள், அங்கு வரும் அகதிகள் ஆகியோரின் முகங்களில் உடன்பிறந்த உணர்வின் மகிழ்ச்சி மலரச் செய்ய கத்தோலிக்கர்கள் உழைக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
மத்தியதரைக்கடல் பகுதியின் 70 ஆயர்கள் மற்றும் 70 இளையோர் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தை செப்டம்பர் 23ஆம் தேதி நிறைவுக்குக் கொணர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்