சீனாவின் கத்தோலிக்க கோவில் சீனாவின் கத்தோலிக்க கோவில்  (AFP or licensors)

சீன ஆயர் : சீன-வத்திக்கான் அரசியல் உறவு விரைவில் துவக்கப்பட...

திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையே அரசியல் உறவு விரைவில் துவக்கப்பட வேண்டும் என தான் செபித்து வருவதாக உரைக்கும் பெய்ஜிங் ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையே அரசியல் உறவு விரைவில் துவக்கப்பட வேண்டும் என தான் இடைவிடாது செபித்து வருவதாக அறிவித்துள்ளார் சீனாவின் பெய்ஜிங் ஆயர் Joseph Li Shan

2023-2024 கல்வியாண்டை பெய்ஜிங் மறைமாவட்டக் குருமடத்தில் துவக்கிவைத்த திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் Li Shan அவர்கள், சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே அரசியல் உறவு விரைவில் இடம்பெறவேண்டும் என்ற ஆவலை குருமட மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்த கல்வியாண்டின் வெற்றிக்காகவும், அருள்பணி பயிற்சிபெற உள்ள மாணவர்கள் நன்முறையில் கற்கவும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காகவும் செபிப்பதாக உரைத்த ஆயர் அவர்கள், சீன-வத்திக்கான் அரசியல் உறவுகள் விரைவில் இடம்பெறவேண்டும் என தொடர்ந்து செபித்து வருவதாகவும் எடுத்துரைத்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2023, 14:54