தடம் தந்த தகைமை - தோபித்து பார்வை இழத்தல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அன்னா என்ற மனைவியுடனும், தோபியா என்ற மகனுடனும் வாழ்ந்த தோபித்து, நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழைகளுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வந்தார். அனாதையாக இறந்தவர்களின் சடலங்களை எடுத்து புதைத்து வந்தார். ஒரு நாள் ஒருவரின் சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடந்ததைக் கண்டு அதனை எடுத்து புதைத்துவிட்டு, அன்று இரவு குளித்துவிட்டு தன் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். வெப்பமாக இருந்ததால் தன் முகத்தை மூடவில்லை. அவர் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தமையால், அவற்றின் சூடான எச்சம் அவர் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் அவர் பார்வைக் குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்து, பார்வையற்றவராக நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்