தேடுதல்

மடகாஸ்கர் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம்) மடகாஸ்கர் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம்)  (AFP or licensors)

உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் 2500 ஆசிய இளையோர்

நிதிப் பற்றாக்குறை, மற்றும் அரசியல் நிலையற்றதன்மை காரணமாக மியான்மாரிலிருந்து உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதிநிதிகளில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் போர்த்துக்கல்லின் லிஸ்பனில் இடம்பெற உள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் ஆசியாவிலிருந்து ஏறக்குறைய 2500 கத்தோலிக்க இளையோர் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பான்மையினோர் தென்கொரியா, பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பர் எனக் கூறும் UCAN செய்தி நிறுவனம், தென் கொரிய மறைமாவட்டங்களில் இருந்து மட்டும் 1,051 பேர் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாகச் செல்வதாகவும் தெரிவிக்கிறது.

நிதிப் பற்றாக்குறை, மற்றும் அரசியல் நிலையற்றதன்மை காரணமாக மியான்மாரிலிருந்து இளையோர் பிரதிநிதிகள் செல்ல முடியாத நிலையில், ஏறக்குறைய 1000 இந்தியர்கள், 313 பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள், இந்தோனேசியாவின் 45 பிரதிநிதிகள், கிழக்கு திமோர் நாட்டின் 53 பேர், பங்களாதேசிலிருந்து 16 பேர், பாகிஸ்தானிலிருந்து 17 பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1985-ஆம் ஆண்டு புனித திருத்தந்தை ஜான் பால் அவர்களால் துவக்கப்பட்ட உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள், அனைத்துலக அளைவில் திருத்தையுடன் திருஅவை அதிகாரிகள் முன்னிலையில்  இளையோர் பங்கேற்புடன் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2023, 14:17