தேடுதல்

ஆப்கான் அகதிகள் ஆப்கான் அகதிகள்   (© 2021 DND-MDN Canada)

ஆப்கான் அகதிகளை உரோம் நகரில் வரவேற்கும் கத்தோலிக்க அமைப்பு

பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டிலிருந்து அகதிகள் முகாம்களில் மிகவும் மோசமான சூழல்களில் வாழ்ந்துவந்த ஆப்கான் அகதிகளுக்குப் புகலிடம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜூலை 20, இவ்வாரம் வியாழனன்று 22 ஆப்கான் அகதிகளை பாகிஸ்தானிலிருந்து உரோம் நகரில் வரவேற்று அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க உள்ளது கத்தோலிக்க Sant'Egidio அமைப்பு.

இது தவிர, மேலும் 20 ஆப்கான் அகதிகள் பாகிஸ்தான் முகாம்களில் இருந்து விரைவில் உரோம் நகர் வந்தடைவார்கள் எனக்கூறும் இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, இத்தாலியின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் உதவியுடன் இந்த மனிதாபிமானப் பணிகளை ஆற்றிவருவதாகவும் தெரிவித்தது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற அகதிகள் முகாம்களில் மிகவும் மோசமான சூழல்களில் வாழ்ந்துவந்த இந்த ஆப்கான் அகதிகள், தற்போது சான் எஜிதியோ குழுவின் உதவியுடன் உரோம் நகர் வந்து புதுவாழ்வைத் துவக்க உள்ளனர்.

சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் திட்டத்தின்கீழ் இவர்கள் இத்தாலியின் பல்வேறு மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டு முதலில் இத்தாலிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவர்.

போராலும் பல்வேறு இடற்பாடுகளாலும் துயர்களை அனுபவித்து, ஏழை நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு இத்தாலிய மக்களின் தாராளமன நிதியுதவியுடன் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் இதுவரை 5400 அகதிகள் இத்தாலிக்குள் அடைக்கலம் தேடியுள்ளனர், இதில் 800 பேர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 14:51