இவ்வுலகிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் தேவை : எஸ்தோனிய இளையோர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் வாழும் இவ்வுலகிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் தேவை என்றும், இந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் லிஸ்பனில் சந்திக்கும் மற்ற இளையோருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என்றும் வத்திக்கான் செய்திக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளனர் எஸ்தோனியா நாட்டைச் சேர்ந்த Paas என்ற இளம்பெண்.
எஸ்தோனியாவைச் சேர்ந்த 17 பேர் அடங்கிய இளையோர் குழு ஒன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி லிஸ்பனில் தொடங்கவிருக்கும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள செல்லும் வழியில் வத்திக்கான் வந்த வேளை அவர்களில் ஒருவரான Paas என்ற இளம்பெண் வத்திக்கான் செய்தியிடம் இவ்வாறு உற்சாகம் பொங்கத் தெரிவித்தார்.
எஸ்தோனியாவில் கிறிஸ்தவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் இல்லையென்றாலும் எங்கள் இளைஞர்கள், தங்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள கத்தோலிக்க இறைநம்பிக்கை மிகவும் முக்கியமானது என்று எல்லோருக்கும் எடுத்துக்காட்ட விரும்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Paas.
எங்களின் விசுவாசத்திற்குச் சாட்சியாக இருக்கவும், எங்கள் பயணம் முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்வுடன் ஆதரவளிக்கவும், வலிமையுடன் செயல்படவும் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் எங்கள் இறைஊழியரிடம் இறைவேண்டல் செய்கின்றோம் என்றும் கூறியுள்ளார் Paas.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்