தேடுதல்

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

பங்களாதேஷில் அமலமரி தியாகிகளின் 50ஆம் ஆண்டு

பங்களாதேஷ் நாட்டிற்குள் 1973-ஆம் ஆண்டில் நுழைந்த அமலமரி தியாகிகள் துறவுசபை, அந்நாளிலிருந்து இன்றுவரை ஏழைகள், மற்றும் குடிபெயர்ந்தோரிடையே சேவையாற்றுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அமல மரி தியாகிகள் துறவு சபை பங்களாதேஷ் நாட்டில் தன் மறைப்பணிகளைத் துவக்கியதன் 50-ஆம் ஆண்டைச் சிறப்பித்து வருகிறது.

1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி இரு அருள்பணியாளர்களுடன் பங்களாதேஷ் நாட்டில் காலடி எடுத்துவைத்த இந்தச் சபை, இஸ்லாமியரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்த நாட்டில் 33 மறைப்பணியாளர்களுடன் இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், 40 ஆரம்பப் பள்ளிகள், 2 குருமடங்கள், பங்குத்தளங்கள் ஆகியவைகளைக் கொண்டு மறைப்பணியாற்றி வருகிறது.

பங்களாதேஷில் அமலமரி தியாயாகிகள் துறவு சபையின் அரை நூற்றாண்டு கொண்டாட்டங்கள், தலைநகரிலுள்ள அச்சபையின் டி மசனெட் கோவிலில் டாக்கா பேராயர் Bejoy D'Cruze, அமலமரி தியாகிகள் துறவு சபை அதிபர், அருள்பணி Luis Ignacio Rois Alonso, பங்களாதேஷ் அமலமரி தியாகிகள் சபையின் தலைவர் அருள்பணி Ajit Victor Costa, 80 அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், 600 விசுவாசிகள் கலந்துகொள்ள இடம்பெற்றது.

பங்களாதேஷ் நாட்டிற்குள் 1973-ஆம் ஆண்டில் நுழைந்த அமலமரி தியாகிகள் துறவுசபை, அந்நாளிலிருந்து இன்றுவரை ஏழைகள், மற்றும் குடிபெயர்ந்தோரிடையே பணியாற்றத் துவங்கி அதனைத் தொடர்ந்து வருகிறது.(AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜூலை 2023, 14:24