தேடுதல்

உலக சுற்றுச்சூழல் நாள் உலக சுற்றுச்சூழல் நாள்  (Copyright (c) 2020 j.chizhe/Shutterstock. No use without permission.)

வாரம் ஓர் அலசல் – உலக சுற்றுச்சூழல் நாள்

வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரும், இயற்கை நல ஆர்வலருமான அருள்பணி ராயப்பா கசி, அவர்கள் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இயற்கை மேல் தான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிறருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருப்பவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் வாழுகின்ற சூழலை சுத்தப்படுத்தி சுவாசிக்க சுத்தமான காற்றைத் தருவது சுற்றுச்சூழல். நிலம் நீர் காற்று நெருப்பு வானம் என ஐம்பூதங்கள் கொண்டு நம் புலன்களையும் பூவுலகையும் சீர்பத்துவது சுற்றுச்சூழல் இத்தகைய சுற்றுச்சூழலின் மாண்பையும் மகத்துவத்தையும் நாம் உணர்ந்து அதை போற்றிப் பெருமைப்படுத்தவே ஆண்டுதோறும், உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்தாம் நாள் கொண்டாடப்படுகின்றது. எனவே இன்றைய நம் வாரம் ஓற் அலசலில் சுற்றுச்சூழல் நாள் பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் எடுத்துரைப்பவர் அருள்பணி கசி இராயப்பா. வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவரும், இயற்கை நல ஆர்வலருமான அருள்பணி ராயப்பா கசி, அவர்கள் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி  இயற்கை மேல் தான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிறருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருப்பவர்.

அருள்பணி. இராயப்பா கசி
நெகிழிக் கழிவுகள்
நெகிழிக் கழிவுகள்

சுற்றுச்சூழல்

நம்மையும் நம்மை சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலான  மரம் , செடி , கொடி , பிற உயிர்கள் அனைத்தையும் சுற்றுச்சூழல் என அழைக்கிறோம்.18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட தொழிற்புரட்சி தொடங்கி, புவி வெப்பமடைதல், காற்று, நீர், நிலமாசுபாடு, பல்லுயிர் இழப்பு போன்ற பரவலான சுற்றுச்சூழல் பாதிப்புகளை மனிதன் ஏற்படுத்த துவங்கிவிட்டான். சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தவறியதன் விளைவுகளை மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கி விட்டனர். மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் வெள்ளம், சூறாவளி இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். இதுபோன்ற ஆபத்துக்களை எடுத்துரைக்கவும், அதைப் பாதுகாக்க மக்களை வலியுறுத்தவும்தான் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day)கொண்டாடப்படுகிறது.

1972ஆம் ஆண்டு சுவீடன் தலைநகரனா ஸ்ரெக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டன. முடிவில் ஜூன் 5ஆம் நாளை உலக சுற்றுச் சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நெகிழிகள் மறுசுழற்சி
நெகிழிகள் மறுசுழற்சி

இந்நிலையில், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினக் (World Environment Day ) கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் ‘பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பயன்பாட்டை தவிர்’ என்பது தான். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்கள் தான். அத்தகைய சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்தாண்டு கருப்பொருள் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் (UN) படி, ஆண்டுதோறும் 400 கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 விழுக்காடு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும். வெறும் 10 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் நுழைந்து கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இதனை அடிப்படையாக்க கொண்டு இந்தாண்டின் கருப்பொருளாக ’Beat plastic pollution' என்று  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தூய்மைப்பணியில் தன்னார்வலர்கள்
தூய்மைப்பணியில் தன்னார்வலர்கள்

நோக்கம்

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துவது கடல்வாழ் உயிரினங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது நாம் அறிந்ததே. இது மனித இடமாற்றத்திற்கு வழிவகை செய்யலாம். அதே நேரம் புவியில் உள்ள தாவரங்கள் , விலங்குகள் , பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயமும் உள்ளது. இது மனித அழிவிற்கு வித்தாக அமையும். எனவே அரசு, வணிக நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்த நாள் அழைப்புவிடுக்கின்றது. கழிவுகளைக் குறைப்பதன் வழியாகவும், ஆற்றலைப் பாதுகாப்பதன் வழியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் வழியாகவும் மக்கள் மேலும் நீடித்து வாழ ஊக்குவிக்கிறது. (இணையதள உதவி)

சுற்றுச்சூழலைக் காத்து சுகமான வாழ்வு வாழ்வோம். அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2023, 12:06