தேடுதல்

 Braille எழுத்துக்களை வாசிக்கும் கரங்கள் Braille எழுத்துக்களை வாசிக்கும் கரங்கள்  (©Roman Milert - stock.adobe.com)

நேர்காணல் - புனித யோசேப்பு அகஒளி பெற்றோர் பள்ளி

வாழ்க்கை என்பது ஒருவிசித்திரமான விளையாட்டு. அது முடியும்வரை நான் ஓயமாட்டேன்.- ஹெலன் ஹெல்லர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புறப்பார்வைத் திறன் இல்லாவிட்டாலும், அகப்பார்வைத் திறன் உடையோர். குரல் கொண்டே ஆளை அடையாளம் காண்போர். பணத்தின் மதிப்பை விரல்களில் அறியும் திறன் பெற்றவர்கள். பாடல் ஆடல், இசை என பிற புலன்களின் ஆற்றலை அபரிமிதமாகப் பெற்றவர்கள். உயரம் பள்ளம் அனைத்தையும் ஊன்றுகோல் கொண்டு அறியும் திறன் மிக்கவர்கள், பார்வையுள்ளவர்களில் சோம்பேறிகள் உண்டு ஆனால் பார்வையற்றவர்களில் சோம்பேறிகளும் இல்லை சோர்ந்து போனவர்களும்  இல்லை. புறஒளியைக் காண இயலாத நிலையிலும் அகஒளி கொண்டு அகிலத்தைக் காண்பவர்கள் இத்தகைய சிறப்பு மிக்க அகவொளி பெற்றவர்களின் அன்னையாக முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஹெலன் ஹெல்லர்.

தன்னம்பிக்கை உள்ளவன் வாழ்வில் வெற்றி பெறுவான் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹெலன் ஹெல்லர். வாழ்க்கை என்பது ஒருவிசித்திரமான விளையாட்டு. அது முடியும்வரை நான் ஓயமாட்டேன். தைரியமே எல்லாத் துன்பத்துக்கும் மருந்து' என்று ஆழமாக நம்பி தன் குறைபாடுகளிலிருந்து மீள, விதியோடு போராடிவெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, ஐம்புலன் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஹெலன் ஹெல்லரின் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்க்கை, வழிகாட்டும் தீபமாகத் திகழ்கின்றது. ஜூன் 27 செவ்வாயன்று ஹெலன் ஹெல்லரின் நாளை  சிறப்பிக்க இருக்கும் வேளையில் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள புனித சூசையப்பர் அகஒளிபெற்றோர் பள்ளி பற்றி இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி பாக்கியா மேரி. சகோதரி அவர்களை புனித யோசேப்பு பார்வையற்றோர் பள்ளி பற்றிய செய்திகளை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்காணல் - அருள்சகோதரி. பாக்யா மேரி ம. ஊ. ச.

‘'வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்று சொன்ன ஹெலன் ஹெல்லர் தானும் அப்படியே வாழ்ந்துகாட்டியவர். வாழ்க்கையில் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் வாழும் அகஒளிபெற்றொர்க்கு வழிகாட்டும் ஊன்றுகோல் போல உடன் இருக்க முயல்வோம். தன்னம்பிக்கையையும் துணிவையும் அவர்களுக்குக் கொடுத்து, நிறைவோடும் மகிழ்வோடும் வாழ்வோம், வாழ வழிகாட்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2023, 12:14