தேடுதல்

தூண்களுக்கிடையில் கட்டப்பட்ட சிம்சோன் தூண்களுக்கிடையில் கட்டப்பட்ட சிம்சோன்  

தடம் தந்த தகைமை - சிம்சோனின் இறப்பு

வீட்டை சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த மக்கள் மீதும் சரிந்து விழுவைத்த சிம்சோன், தான் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை சாகும்போது கொன்றார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிம்சோனை சூழ்ச்சியால் கைது செய்தபின் பெலிஸ்தியச் சிற்றரசர், “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்” என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர். அவர்கள் அகமகிழ்ந்திருக்க, “சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்” என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர். சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் “இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்; நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன்” என்றார். ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிம்சோன் ஆண்டவரை நோக்கி, “என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே! என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும்” என்று மன்றாடினார். சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார். சிம்சோன், “என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்” என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார். அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2023, 11:42