தேடுதல்

சிம்சோன் தன் மனைவியுடன் சிம்சோன் தன் மனைவியுடன் 

தடம் தந்த தகைமை – சிம்சோன் மனைவியைப் பிரிதல்

“உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது; வலியவனிடமிருந்து இனியது வந்தது” என்ற விடுகதையை நண்பர்கள் குழுவின் முன் வைத்தார் சிம்சோன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிங்கக்குட்டியை வெறுங்கையால் கிழித்துக் கொன்ற சிம்சோன், சில நாட்களுக்குப்பின் சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் இருப்பதைக் கண்டு அதை எடுத்துச் சுவைத்தார். பின் மனைவி வீட்டில் தோழர்கள் முப்பது பேருடன் விருந்துண்கையில் விடுகதை ஒன்றுச்சொல்லி பந்தயம் வைத்தார். அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே “உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது; வலியவனிடமிருந்து இனியது வந்தது” என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடுகதைக்கு விடை காணமுடியவில்லை.

நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “உன் கணவனை மயக்கி, விடுகதையின் விடையை எங்களுக்குக் கூறச் சொல். இல்லையேல், உன்னையும் உன் தந்தையின் வீட்டையும் தீக்கிரையாக்குவோம். நீங்கள் எங்களைக் கூப்பிட்டது கொள்ளையடிக்கவா?” என்றனர். சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், “நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுகதை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே” என்றாள். அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர் முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்து விட்டாள். ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், “தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது?” என்றனர். ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் சிம்சோன் மீது இறங்கியது. அவர் அஸ்கலோனுக்குச் சென்று, அங்குள்ளவர்களுள் முப்பது பேரைக் கொன்று, அவர்கள் உடைகளை உரிந்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்குக் கொடுத்தார். அவருக்குச் சினம் பொங்கியெழ, அவர் தம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார். சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2023, 14:06