தேடுதல்

மோதலால் சிதிலமடைந்துள்ள கட்டிடத்தின் நடுவே செல்லும் பெண் மோதலால் சிதிலமடைந்துள்ள கட்டிடத்தின் நடுவே செல்லும் பெண்  

காசாவில் மோதல்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் இல்லை

அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட வேளை, நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம் என்றும், அமைதியான சூழல் ஏற்பட காத்திருக்கிறோம் : அருள்பணியாளர் Romanelli.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நடக்கும் ஆயத மோதல்களால் காசா மற்றும் முழுப் பகுதியிலும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடங்கியுள்ளது," என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் அருள்பணியாளர் Gabriel Romanelli.

வன்முறை அதிகரித்து வருவதால், அதன் சுழல் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும், போர்நிறுத்தம் ஏற்ப்படவேண்டுமென பலர் ஏங்கிக் காத்திருக்கின்றனர் என்றும் விளக்கினார் காசாவிலுள்ள பங்குத்தளம் ஒன்றில் பணியாற்றிவரும் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் Romanelli.

இத்தகைய ஆயுத மோதல்களால், மக்களின் வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட வேளை, நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம் என்றும், அமைதியான சூழல் ஏற்பட காத்திருக்கிறோம் என்றும் கவலை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Romanelli.

காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது 15க்கும் மேற்பட்ட இராக்கெட்டுகள் ஏவப்பட்ட பின்னர், இஸ்ரேயல் வான்வழித் தாக்குதல்களுடன் அதற்குத் தக்க பதிலளித்தது என்றும், இதனால் ஏறத்தாழ 13 மணிநேர இடைநிறுத்தத்திற்குப் பிறகு, உண்மையான போர்நிறுத்தம் இல்லையென்றால் இராணுவ விரிவாக்கம் இடைநிறுத்தப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Romanelli.

நாங்கள் நலமாக இருக்கிறோம், முடிந்தவரை எங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் உரைத்த அருள்பணியாளர் Romanelli வழிபாட்டு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன என்றும், செபமாலையைப் போல, நாங்கள் இணையம் வழியாக ஒளிபரப்புகிறோம், இதனால் இறைமக்கள் அதில் அதிகம் பங்கேற்க முடியும் என்றும் நமபிக்கை தெரிவித்தார். (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2023, 15:19