ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா: உயிர்ப்பின் மக்களாய் வாழ்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
சாவை வென்று, வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்த நமதாண்டவரின் இலட்சிய வழியில் நாமும் சமத்துவ சமுதாயம் படைத்திட அழைக்கப்படுகின்றோம். ஓடும்போது விழுந்துவிடுவோம் என்று நினைப்பவரை விட, விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவரே, இலட்சியப் பயணத்தில் வெற்றிபெறுவார். தனது கல்வாரிப் பயணத்தில் சறுக்கி விழுந்தாலும் சட்டென எழுந்து நடந்து சாதித்துக் காட்டி சரித்திரம் படைத்தார் நமதாண்டவர் இயேசு. தனது இலட்சியப் பயணத்தில் அவர் சந்தித்த கொடிய வேதனைகளுக்குப் பரிசாக இறைத்தந்தை அவருக்குக் கொடுத்ததுதான் உயிர்ப்பு என்னும் உயரிய விருது.
இந்தப் புனிதமான நாளிலே, உயிர்புப் பெருவிழாக் குறித்தத் தனது சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் அருள்பணியாளர் டேவிட். கோவை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் டேவிட் அவர்கள் தற்போது விசுவாசபுரம் பங்கின் பங்குத் தந்தையாகவும், வட்டார அதிபராகவும் பணியாற்றுகின்றார். எளிமையும், உயர்ந்த ஆன்மிகமும், ஆழமான இறையியல் சிந்தனையும் கொண்ட தந்தை அவர்கள் எங்குச் சென்றாலும் அப்பங்கை திறம்பட வழிநடத்துவதில் மிகுந்த திறன் கொண்டவர். இறைமக்களுடனும் சக அருள்பணியாளர்களுடனும் எப்போதும் நல் உறவுகளைப் பேணக்கூடியவர். ஆழமான மற்றும் எதார்த்தமான மறையுரைச் சிந்தனைகள் வழியாக மக்களின் மனங்களைக் கவரக் கூடியவர். தான் மகிழ்ந்திருப்பது மட்டுமன்றி, அனைவரையும் கிறிஸ்து இயேவுக்குள் மகிழ்ந்திருக்கச் செய்பவர். இறையாட்சியைக் கட்டியெழுப்பும் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள அருமையான அருள்பணியாளர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்