புனித பூமியை தரிசிக்க வருவோருக்கு பாதுகாப்பு உறுதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உயிரோட்டமுடைய நம்பிக்கையில் நாம் புதுப்பிறப்பெடுக்க உதவும் இயேசுவின் உயிர்த்தெழுதல், நம் சிரமங்களையும், துன்பங்களையும் மகிழ்ச்சியுடனும் அருளுடனும், மாண்புடனும் ஏற்றுக்கொள்ள நமக்கு பலம் அளிக்கின்றது என தங்கள், இயேசு உயிர்ப்புவிழா செய்தியில் அழைப்புவிடுத்துள்ளனர் யெருசலேமின் முதுபெரும் தந்தையர்.
புனித பூமியில் வன்முறைகள் அதிகரித்துவரும் அதேவேளை, ஆதிக்கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுபோல், புனிதபூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும், சில கோவில்கள், சவ அடக்க ஊர்வலங்கள், மக்கள் கூடும் இடங்கள் அண்மைக்காலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதைக் குறித்து தங்கள் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள முதுபெரும் தந்தையர், பாதுகாப்புக் குறித்த ஒப்பந்தம் அரசுடன் இருக்கின்றபோதிலும், தாக்குதல்கள் தொடர்வது கவலை தருவதாக உள்ளது என கூறியுள்ளனர்.
புனித இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், புனித இடங்களை தரிசிக்க வருவோருக்கு பாதுகாப்பு உறுதிச் செய்யப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளனர் யெருசலேம் முதுபெரும் தந்தையர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்