தேடுதல்

சீனாய் மலை சீனாய் மலை  

தடம் தந்த தகைமை : ‘மூன்றாம் நாளுக்காகத் தயாரான இஸ்ரயேலர்!’

மூன்றாம் நாளில், அனைத்து மக்களுக்கும் முன்பாக, ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்.

 

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு, அவர்கள் மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கிவருவார். மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு. உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி. அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாகவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள் மலைமேல் ஏறிவரட்டும்” என்றார்.

மோசே மலையை விட்டு இறங்கி மக்களிடம் சென்றார். மக்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள். அவர் மக்களை நோக்கி, “மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள். மனைவியோடு கூடாதிருங்கள்” என்றும் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2023, 12:25