தேடுதல்

கர்தினால் Péter Erdő கர்தினால் Péter Erdő 

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நிறைமகிழ்வைத் தருகிறது

திருத்தந்தையின் ஹங்கேரி வருகை பற்றிய அறிவிப்பு செய்தி தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது : கர்தினால் Péter Erdő.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹங்கேரி நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார் Esztergom மற்றும் Budapest பேராயர் கர்தினால் Péter Erdő.

ஹங்கேரி நாட்டின் அரசு மற்றும் திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அந்நாட்டு தலைநகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளை, வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார் கர்தினால் Erdő.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்த தங்களின் எதிர்பார்ப்புகள் எவை என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, திருத்தந்தையின் ஹங்கேரி வருகை பற்றிய அறிவிப்பு செய்தி தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும், ஹங்கேரிய மற்றும் புடாபெஸ்ட் தலத் திருஅவைகளாக தங்கள் முன்னரே திருத்தந்தையை அழைத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை ஹங்கேரிக்கு வருவது இது முதல் முறை இல்லையென்றாலும் அவரின் திருத்தூதுப் பயணம் எந்தவிதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Erdő, ஹங்கேரி நாட்டின் மொத்த நம்பிகையாளர்களையும் திருத்தந்தை சந்திக்கவிருப்பதால் இத்திருத்துப்பயணம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கூறினார்.

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 12ஆம் தேதியன்று, ஸ்லோவாக்கியாவுக்குச் செல்லும் வழியில், 52வது அனைத்துலக நற்கருணை மாநாட்டின் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் சில மணிநேரங்கள் தங்கியிருந்தார் என்றும் இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், நம்பிக்கையாளர்கள் மற்றும் திருப்பயணிகள் 83 நாடுகளிலிருந்து வந்திருந்தனர் என்றும் விளக்கினார் கர்தினால் Erdő.

ஹங்கேரி நாடு, உக்ரைன் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளித்துள்ள வேளை, உக்ரைனில் தொடரும் போர் நிறைந்த சூழலில், இந்தத் திருத்தூதுப் பயணம் எவ்வித்தில் பயன்தரும் என்பது குறித்தும், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு எந்தெந்த விதத்தில் உதவ முடியும், அதற்கு எம்மாதிரியான முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் இந்த நேர்காணலின் போது எடுத்துரைத்தார் கர்தினால் Erdő.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2023, 14:03