தேடுதல்

செபத்தில் அருள்சகோதரிகள் செபத்தில் அருள்சகோதரிகள்  (AFP or licensors)

உலகக் கத்தோலிக்கர்களில் ஒன்பதுக்கு ஒருவர் ஆசியக் கண்டத்தில்

ஓராண்டில் உலக மக்கள் தொகை 1.6 விழுக்காடு அதிகரிக்க, கத்தோலிக்கர்களோ 1.3 விழுக்காடே அதிகரித்திருக்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகக் கத்தோலிக்கர்களில் ஒன்பதுக்கு ஒருவர் ஆசியக் கண்டத்தில் வாழ்வதாகவும், ஆசிய கத்தோலிக்கர்கள் 0.99 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2021ல் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறித்து கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட திருப்பீட ஆண்டு புத்தகத்தில், உலக அளவில் இருக்கும் கத்தோலிக்க அருள்கன்னியர்களுள் ஏறக்குறைய 30 விழுக்காடு, அதாவது 1 இலட்சத்து 75,000 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் எனினும், குருத்துவ பயிற்சிக்கு முன்வரும் இளையோரின் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகவும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் 136 கோடியாக இருந்த உலகக் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் 137 கோடியே 80 இலட்சமாக, அதாவது 1.3 விழுக்காடு அதிகரித்தாகவும் கூறும் இவ்வறிக்கை, இது ஓராண்டில் உலக மக்கள் தொகைப் பெருக்கமான 1.6 விழுக்காட்டோடு ஒப்பிடும்போது குறைவே எனவும் தெரிவிக்கிறது.

2021ஆம் ஆண்டில் உலகில் 608,958 அருள்கன்னியர்கள் இருந்த நிலையில், இதில் 175,494 பேர், அதாவது 28.9 விழுக்காட்டினர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2023, 14:04