தேடுதல்

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மலாவி பகுதி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மலாவி பகுதி  

மலாவியில் துன்புறும் மக்களுடன் இயேசு சபையினர்

மலாவி சூறாவளியின் விளைவுகளான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடயே முன்னணியில் நிற்கும் கத்தோலிக்க அமைப்புக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மலாவி நாட்டில் மார்ச் மாதம் 12ஆம் தேதி இடம்பெற்ற சூறாவளிக் காற்றால் 447பேர் வரை உயிரிழந்தும், 300பேர் வரை காணாமல் போயும் உள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்காக உதவிகளை பிற அமைப்புக்களுடன் இணைந்து வழங்க முன்வந்துள்ளனர் இயேசு சபையினர்.

அண்மை சூறாவளியால் உயிரிழப்புக்களுடன், மூன்று இலட்சத்து 50,000 பேர் வரை குடிபெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வேளையில், அவர்களுக்கு உதவவும், இத்தகைய பேரழிவுகள் மேலும் இடம்பெறாமல் தடுக்கவும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது, இயேசு சபையினரின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சித்திட்ட மையம்.

சூறாவளியின் விளைவுகளான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட

மக்களிடயே முன்னணியில் நின்று நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் கத்தோலிக்க அமைப்புக்கள், அம்மக்களை திருஅவை கட்டிடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தியுள்ளன.

ஏழைகள் மற்றும் இப்பூமியின் அழுகுரலுக்கு செவிமடுக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் அழைப்பிற்கு இயைந்தவகையில் மலாவி ஏழை மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்திவருவதாக தெரிவித்துள்ளது இயேசு சபையின் உதவி அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2023, 13:47