புனித பூமியில் அமைதி நிலவட்டும் : முதுபெரும் தந்தையர்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பூமியில் நிகழ்ந்துள்ள அண்மைய வன்முறைச் சம்பவங்களால் பெரும் கவலை அடைந்துள்ளதாக எருசலேமிலுள்ள முதுபெரும் தந்தையர்களும், தலைதிருஅவை தலைவர்களும் கூறியுள்ளனர்.
பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை இரவு, 12க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றத்தாரர்கள் பாலஸ்தீனிய நகரமான ஹுவாராவில் ஒருவரைக் கொன்றதுடன் பல்வேறு மக்களை உலோகக் கம்பிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் காயப்படுத்தியும், ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியும் உள்ள வேளை, இவ்வாறு கூறியுள்ளனர் முதுபெரும் தந்தையர்கள்.
இந்த வலிமிகுந்த வன்முறைச் சம்பவங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் உள்ள பதட்டங்களை உடனடியாகத் தணிப்பது மட்டுமல்லாமல், பன்னாட்டுத் தீர்மானங்கள் மற்றும் சட்டங்களின்படி இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு நீடித்ததொரு தீர்வைக் கண்டறிவேண்டியது மிகவும் அவசியமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வேதனை நிறைந்த இந்த நீண்ட கால மோதலால் அனைவரும் கவலையடைந்துள்ள வேளை, புனித பூமியில் அமைதி மற்றும் நீதிக்காக முயற்சிக்கும் நல்லெண்ணமுள்ள அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்கின்றோம் என்றும் கூறியுள்ளனர் (ICN)
இந்நிகழ்வு துப்பாக்கி ஏந்திய ஒரு பாலஸ்தீனியர் இரண்டு இஸ்ரேலிய குடியேற்றத்தாரர்களைக் கொன்றதற்குப் பதிலடியாக நடந்தது என்றும் இந்தச் சம்பவம், நடப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு நாப்லஸி என்னும் இடத்தில் பதினொரு பாலஸ்தீனியர்களைக் கொன்றதற்குப் பதிலளிக்கும் விதமாக இது நிகழ்ந்ததாகவும் செய்திகள் மேலும் கூறுகின்றன.
ஜோர்டானின் அகபாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களுக்கு இடையேயான நிகழ்ந்த சந்திப்பின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும், இந்தச் சந்திப்பில், இஸ்ரேல், பாலஸ்தீனிய பகுதிகளில் குடியேற்ற விரிவாக்கத்தை நிறுத்துவதாக உறுதியளித்தது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்