தேடுதல்

பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் 

தடம் தந்த தகைமை – ஆண்டவரின் புளிப்பற்ற அப்ப விழா

பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு அவர் உங்களை அழைத்துச் சென்றபின், இதே மாதத்தில் ஏழாம் நாளை நீங்கள் ஆண்டவரின் விழாவாகக் கொண்டாட வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எகிப்திலிருந்து வெளியேறிய மக்களை நோக்கி மோசே பின்வருமாறு கூறினார். அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது. ஆபிபு மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள். கானானியர், இத்தியர், எமோரியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டை தருவதாக ஆண்டவர்உன் மூதாதையருக்கு வாக்களித்திருந்தார். பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு அவர் உங்களை அழைத்துச் சென்றபின், இதே மாதத்தில் நீங்கள் இவ்வழிபாட்டைச் செய்யுங்கள். ஏழுநாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும். ஏழாம் நாளை ‘ஆண்டவரின் விழா’வாகக் கொண்டாட வேண்டும். ஏழு நாள்கள், புளித்த அப்பம் புளித்த மாவும் உங்கள் எல்லைக்குள் எங்குமே காணப்படக்கூடாது. அந்நாளில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எங்களுக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு” என்று சொல்லுங்கள். ஆண்டவரின் சட்டம் உங்கள் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உங்கள் கையில் அடையாளமாகவும், கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில், ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உங்களை வெளியேறச் செய்தார். எனவே, ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று  மோசே கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2023, 15:43