தேடுதல்

எகிப்தை விட்டு வெளியேறிச் செல்லும் இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிச் செல்லும் இஸ்ரயேல் மக்கள்  

தடம் தந்த தகைமை : ஆண்டவர் விழித்திருந்த இரவு!

ஆண்டவராம் கடவுள், தனது மக்களை விடுவிக்கும் விடுதலைப் பணியில் அயர்வதுமில்லை உறங்குவதுமில்லை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எகிப்தியரை இஸ்ரயேல் மக்கள் கொள்ளையிட்டு வெளியேறிய பின்னர், அவர்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். அவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆண்கள் மட்டும் ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர் இருந்தனர். மேலும், இஸ்ரயேல் மக்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன. எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் புளிப்பற்ற அப்பங்களைச் சுட்டனர். ஏனெனில், அவர்கள் வைத்திருந்த மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து உடனடியாகத் துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்யாமல் புறப்பட வேண்டி இருந்ததாலும், வழியில் உண்பதற்குத் தேவைப்படும் உணவை அவர்கள் முன்னரே தயார் செய்து வைத்திருக்க முடியாமல் போயிற்று.

எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்! நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் அனைத்தும் எகிப்து நாட்டினின்று வெளியேறியது. எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவாகவே அமைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2023, 13:28