தேடுதல்

புளிப்பற்ற அப்பங்களை உண்ணும் இஸ்ரயேல் மக்கள் புளிப்பற்ற அப்பங்களை உண்ணும் இஸ்ரயேல் மக்கள்  

தடம் தந்த தகைமை : ‘விடுதலையின் வித்தான புளிப்பற்ற அப்ப விழா!’

இறைவன், தான் தெரிந்துகொண்ட மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க எடுக்கும் மிகப்பெரும் இறுதி முயற்சிதான் பாஸ்கா என்னும் கடத்தல் நிகழ்வு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மோசேக்கும் ஆரோனுக்கும் புளிப்பற்ற அப்ப விழா குறித்து இவ்வாறு விளக்கிக் கூறினார் ஆண்டவர். இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக! ஏழு நாள்களுக்குப் புளிப்பற்ற அப்பங்களையே உண்ணுங்கள்! முதல் நாளிலேயே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள். ஏனெனில் முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரை புளித்த அப்பத்தை உண்பவன் இஸ்ரயேலிலிருந்து விலக்கி வைக்கப்படுவான். முதல் நாளிலும், ஏழாம் நாளிலும் நீங்கள் புனித அவை கூடுவதற்கு அழையுங்கள்” என்றார்.

மேலும், “இந்நாள்களில் எவ்வேலையும் செய்ய வேண்டாம்; ஒவ்வொருவரும் உண்ணத் தேவையானதை மட்டும் நீங்கள் தயார் செய்யலாம். புளிப்பற்ற அப்ப விழாவை நீங்கள் கொண்டாடிவர வேண்டும். ஏனெனில், இந்த நாளில்தான் உங்கள் படைத்திரளை நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்தேன். நீங்கள் இந்நாளைத் தலைமுறைதோறும் கொண்டாடி, நிலையான நியமமாகக் கொள்ளுங்கள். முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை தொடங்கி அம்மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரை புளிப்பற்ற அப்பம் உண்ணுங்கள். ஏழு நாள்கள் உங்கள் வீடுகளில் புளித்த மாவு காணப்படவே கூடாது. ஏனெனில், புளித்த அப்பத்தை உண்பவன், அந்நியனானாலும் நாட்டின் குடிமகனானாலும், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவான். நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்” என்றும் அறிவுறுத்தினார் ஆண்டவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2023, 13:07