தடம் தந்த தகைமை - யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஆளுநர் யோசேப்பின் கட்டளைப்படி, பென்யமினை அழைத்துச்செல்ல வந்த அவரின் சகோதரர்கள், தங்கள் நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை, அதாவது கொஞ்சம் தைல வகைகள், தேன், நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம், தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை காணிக்கையாக எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.
யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார். உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.
பின்னர் தன் சகோதரர்கள் முன் கூக்குரலிட்டு அழுது, தம் சகோதரர்களை நோக்கி, “நான் தான் யோசேப்பு! என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்! நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார். நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஐந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது. ஆதலால், உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார். என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம், என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்