தேடுதல்

தன் மகன் யோசேப்பைக்  காண யாக்கோபு எகிப்து நோக்கிப் பயணம் செய்தல் தன் மகன் யோசேப்பைக் காண யாக்கோபு எகிப்து நோக்கிப் பயணம் செய்தல் 

தடம் தந்த தகைமை - எகிப்து நோக்கி யாக்கோபு பயணம்

கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன்” என்றார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிலிருந்த தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் அவரிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர்” என்று அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை. ஆனால், யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார். இறுதியில் இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்” என்றார்.

பின்பு, இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “யாக்கோபு! யாக்கோபு!” என்று அழைத்தார். அவர், “இதோ அடியேன்” என்றார். கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2023, 09:49