நவீன காலத்திலும் பஞ்சத்தால் வாடும் மக்கள் நவீன காலத்திலும் பஞ்சத்தால் வாடும் மக்கள் 

தடம் தந்த தகைமை - யோசேப்பின் சகோதரர் கானான் திரும்புதல்

தன் சகோதரர்களின் கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார் ஆளுநராயிருந்த யோசேப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பஞ்சத்தால் கானான் நாட்டிலிருந்து எகிப்து வந்த யோசேப்பின் சகோதரர்களுக்கு, தன்னை வெளிப்படுத்தாமலேயே, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, அவரவர் பணத்தைத் திரும்ப அவரவர் பையிலிட்டுக் கட்டவும், வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார் ஆளுநராயிருந்த யோசேப்பு. அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள், என ஆளுநர் கட்டளையிட்டதையும் தந்தையிடம் தெரிவித்தனர்.

அதற்கு தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, “என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள். யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை; இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!” என்றார். அதற்கு ரூபன் தம் தந்தையிடம், “நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2023, 15:29