திருத்தந்தையின் வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கும் PMS அமைப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
PMS என்னும் திருப்பீட மறைப்பணி அமைப்புக்களின் தேசிய இயக்குநரகங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் பேராயர் எமிலியோ நப்பா.
PMS இன் தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகள் வழியாக சேகரிக்கப்படும் உதவி, சிரியா மற்றும் துருக்கியின் PMS இன் தேசிய கிளைகளுடன் நேரடி தொடர்பில் நிர்வகிக்கப்படும் என்றும் உள்ளூர் தலத்திரு அவைகளின் தேவைகள் மற்றும் அவசரங்களை அறிந்தவர்கள் வழியாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் PMS இன் தலைவர் பேராயர் எமிலியோ நப்பா.
மறைப்பணி பகுதிகளை ஆதரிப்பதில் உறுதிபூண்டுள்ள இவ்வமைப்பு, நில நடுக்கத்தால் இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை, அதன் அவசரநிலையை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உடனடியாக ஒரு தற்காலிக நிதி திரட்டலுக்கு உயிர் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் எமிலியோ நப்பா.
துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தினால் 41ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், எண்ணற்ற ஒற்றுமை முயற்சிகள் உலகம் முழுவதிலும் இருந்து தொடங்கியுள்ளன.
PMSன் முதல் தேசிய இயக்குனரகங்களில், துருக்கி மற்றும் சிரியாவின் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், மால்டா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தகவல் தொடர்பு கருவிகள் மற்றும் சமூக வலைப்பின்னல்கள் வழியாக இணைந்து செயலாற்றுகின்றன.
"அலெப்போவின் நிலைமை இன்று பேரழிவு தரக்கூடியது, நாங்கள் குழப்பம் மற்றும் பாழடைந்த நிலையில் உள்ளோம்" என்று சிரியாவில் உள்ள PMS இன் தேசிய இயக்குனரும், அலெப்போவில் உள்ள சிரோ-கத்தோலிக்க ஆலயத்தின் முதன்மை அருள்பணியாளருமான மௌனிர் சாக்கல் கூறியுள்ளார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்