தேடுதல்

ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்தில் பேசிய  அருள்சகோதரி Nathalie Becquart ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்தில் பேசிய அருள்சகோதரி Nathalie Becquart 

ஒருங்கிணைந்த பயணத்தில் முன்னணியில் ஆயர்கள் உள்ளார்கள்

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதை வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தலத்திருஅவை வளரும் திருவையின் அடையாளம் எனவும், ஒருங்கிணைந்த பயணம் திருஅவையின் உண்மையான அடையாளம் என்றும் அனைத்து ஆயர்களும் ஒருங்கிணைந்த பயணத்தில் முன்னனியில் இருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Nathalie Becquart   

பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை, ஆஸ்திரேலியாவிற்கான ஒசியானியா ஒன்றிணைந்த பயணக் கூட்டமானது சுவாவில் நடைபெற்று வரும் வேளையில், அதில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார் இறையியலாளர் அருள்சகோதரி Nathalie.   

ஒருங்கிணைந்த பயணம், கடலைப் பராமரித்தல், உருவாக்கும் பணி ஆகிய மூன்று மேய்ப்புப்பணி சவால்களை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்றாவது நாள்   கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஒருங்கிணைந்த பயணத்தில் முன்னனியில் இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Nathalie  

கடல், அமைதியாக இருந்தாலும் கூட, மாற்றங்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அருள்சகோதரி Nathalie, அதைக் கடக்கும்போது மக்கள் ஆபத்துக்களை எதிர்கொள்கிறார்கள் என்றும், உயிர்வாழ்வதற்கு தங்கள் சமநிலையை எவ்வாறு வைத்திருப்பது என்பதை மக்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதை வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ வேண்டும் என்றும், கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் வழியாகச் சந்தித்து வாழ அழைக்கப்படுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

துன்பம் மற்றும் சிரமத்தை எதிர்கொள்வது ஒருங்கிணைந்த பயணத்தின் ஒரு அம்சம் என்று விளக்கிய அருள்சகோதரி Nathalie, "நம்முடைய அச்சங்களால் நாம் வழிநடத்தப்படுகிறோமா? அல்லது தூய ஆவியின் அழைப்பை உணர்ந்து அவற்றால் வழிநடத்தப்படுகிறோமா?" என்று சிந்தித்து வாழ வலியுறுத்தியுள்ளார்.

எம்மாவுஸை நோக்கிச் சென்ற சீடர்களின் வழியில் ஒருங்கிணைந்த பயணம் செல்கின்றது என்றும், ஒருங்கிணைந்த பயணத்தை  வழி நடத்திச் செல்லும் கலை என்றும் குறிப்பிட்டுள்ள அருள்சகோதரி Nathalie, கடலின் குரலுக்குச் செவிகொடுப்பதும், கப்பலின் இயக்கத்திற்குப் பதிலளிப்பதும் கப்பல் தலைவனுக்கு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2023, 14:42