தேடுதல்

வாஷிங்டன் விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்கள் வாஷிங்டன் விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்கள்   (AFP or licensors)

நிகரகுவா அரசால் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்ட அருள்பணியாளர்கள்

நாடுகடத்தப்பட்டவர்கள் நாட்டிற்கு துரோகம் செய்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டும், குடியுரிமை மற்றும் பிற உரிமைகள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டும் நிகரகுவா அரசால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனாகுவாவில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அரசியல் காரணங்களுக்காக 222 சிறைக்கைதிகள் நிகரகுவா நீதி அமைப்பால் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் 5 அருள்பணியாளர்கள், ஒரு திருத்தொண்டர், 2 அருள்பணித்துவ மாணவர்களும் அடங்குவர் என்றும் நிகரகுவாவின் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 10 வெள்ளிக்கிழமையன்று, மனாகுவா மேல்முறையீட்டு நீதிமன்றம், வன்முறை பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு நாட்டின் இறையாண்மைக்கு கேடுவிளைவித்ததற்காக 222 பேரை தேசத்துரோகிகள் என்று அழைத்து அவர்களை நாடுகடத்த தீர்ப்பளித்து பட்டியல் ஒன்றினை வெளியிட்டது.

அதில் "வன்முறை, பயங்கரவாதம், நிலையற்ற பொருளாதரம் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களின் சுதந்திரம், இறையாண்மையைக் குறைவாக மதிப்பிடும் செயல்களில் ஈடுபட்டதற்காக 222 பேரை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, அருள்பணியாளர்கள், Óscar Benavides, Ramiro Tijerino, Sadiel Eugarrios, José Díaz மற்றும் Benito Martínez, திருத்தொண்டர், Raúl Vega அருள்பணித்துவமாணவர்கள், Melkin Centeno, Darvin Leyva ஆகியோரும், Matagalpa மறைமாவட்டத்தில் பணியாற்றும் இரண்டு ஊடகப் பணியாளர்கள் Manuel Obando மற்றும்  Wilberto Astola. அடங்குவர்.

நாடுகடத்தப்பட்ட அவர்கள் நாட்டிற்குத் துரோகம் செய்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் குடியுரிமை மற்றும் பிற உரிமைகள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டு நிகரகுவா அரசால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகளின் படி, Matagalpa மறைமாவட்ட ஆயரும், Estelí, மறைமாவட்டத்தின் நிர்வாகியுமான ஆயர்  Rolando José Álvarez  நாடுகடத்தப்படவில்லை என்றும், பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பின் அவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரியவருகின்றது. அவரைப் போலவே, Granada மறைமாவட்ட அருள்பணியாளர்களான Manuel García மற்றும் José Urbina வும் தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றார்கள் .

நாடுகடத்தப்பட்ட நபர்களின் குழுவில் இல்லாத ஆயர் Rolando José Álvarez அவர்கள்,  Tipitapa வில் உள்ள La Modelo என்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2023, 12:17