முறையான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் நிலையில் மாணாக்கர்
மெரினா ராஜ் - வத்திக்கான்.
ஏறக்குறைய 1கோடியே 80 இலட்சம் மாணவர்கள் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி துன்புறுகின்றனர் என்றும், இதற்குக் காரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசகர்கள் இல்லாததேயாகும் என்று கவலை தெரிவித்துள்ளார் ஆயர் Rex Alarcon
பிப்ரவரி 20, திங்களன்று, உகான் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள Daet மறைமாவட்ட ஆயரும், ஆசிய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவருமான ஆயர் Rex Alarcon அவர்கள், சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால் குற்றங்களின் எண்ணிக்கைத் தடுக்கப்பட்டிருக்கலாம்" என்றும் கூறியுள்ளார்.
பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் Senator Sherwin Gatchalian என்னும் சிறார் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டிய ஆயர் Alarcon, ஏறக்குறைய 1கோடியே 75 இலட்சம் மாணவர்கள் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இக்கணக்கெடுப்பு ஜனவரி மாதம் 654 பள்ளிகளில் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் அடிப்படைக்கல்வி, மனநலம், உடல்நலம், போன்றவற்றை வலியுறுத்துவதோடு, கற்பவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மனநலச் சேவைகளை மேம்படுத்துதலை வலுப்படுத்த முயல்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் Alarcon.
"கல்வித்துறை ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும் ஒரு வழிகாட்டி ஆலோசகரை மட்டுமே பணியமர்த்துகிறது, அதாவது, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, 2 கோடியே 70 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 4,069 வழிகாட்டுதல் ஆலோசகர்களை மட்டுமே பிலிப்பீன்ஸ் கொண்டுள்ளது" என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் Alarcon.
கல்வித் துறையின் தரவு
நாட்டில் 2கோடியே74 இலட்சம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்றும், அதில் ஒவ்வொரு 6,733 மாணவர்களுக்கும் ஒரு ஆலோசகரே நியமிக்கப்பட்டிருப்பது அநீதியானது என்றும் எடுத்துரைத்துள்ள ஆயர் Alarcon அவர்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 6,000 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதால் எந்த ஆலோசகரும் பள்ளிகளில் பணியாற்ற விரும்பவில்லை என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
கத்தோலிக்க தனியார் பள்ளிகளில் அதிக வழிகாட்டுதல் ஆலோசகர்களைப் பெறுவதற்கு ஊதியத்தை உயர்த்துவதற்கான பரிந்துரையைக் கொண்டு வருவதை ஆணையம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ள ஆயர் Alarcon அவர்கள், தொற்றுநோயின் தாக்கத்தினால் அதிகமான குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மாணவர்களின் திறனை அதிகரிக்கவும், வகுப்பறைக்குள் புரிதல் மற்றும் அக்கறையை மேம்படுத்தவும் தொழில் வல்லுநர்களாக, ஒவ்வொரு குழந்தையின் முழுமையான நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ளவும், அவர்களின் வெற்றி மற்றும் தோல்விகளைக் கேட்கவும், ஆலோசகர்கள் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் Alarcon.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்