கனவு காண்பதற்குத் துணிவு கொள்ளுங்கள்; கர்தினால் Czerny
செல்வராஜ் சூசைமாணிக்கம்
திருஅவை ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை முன்மொழிகிறது என்று கூறியுள்ளார் வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மேம்பாட்டுத்துறையின் தலைவரான கர்தினால் Czerny
பிப்ரவரி 5, இஞ்ஞாயிறன்று, Oceaniaவிலுள்ள Fiji-வில் தொடங்கிய கத்தோலிக்க ஆயர்பேரவையின் பொதுப் பேரவையின் தொடக்க நாள் திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது இவ்வாறு தெரிவித்துள்ள கர்தினால் Czerny அவர்கள் கனவு காண்பதற்குத் துணிவு கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
'கடலையும் பூமியையும் காப்பாற்றுங்கள்' என்ற கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கடல் "வாழ்க்கையின் தொட்டில்" என்பதை ஏற்றுக்கொண்டு, படைப்பை மதிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய கர்தினால் Czerny அவர்கள், கடல்வளச் சுரண்டல், மனித கடத்தல், இடம்பெயர்வு மற்றும் புவி-அரசியல் போட்டிகள் உட்பட அந்நாட்டைப் பாதிக்கும் பல பதட்டங்களையும் அங்கீகரித்துள்ளார்.
திருஅவை மனித வளர்ச்சியைப் பற்றி பேசுவதற்கு மட்டுமல்ல, மனித வரலாற்றில் தலையிடுவதற்கும், நிகழ்காலத்தை அக்கறையுடன் வளப்படுத்துவதற்கும் அழைக்கப்படுகிறது என்று எடுத்துரைத்த கர்தினால் Czerny அவர்கள், இதனை நிறைவேற்றுவதற்கு திருஅவை மக்களுடன் இணைந்து செல்லவேண்டும் என்று, இது மக்கள் கூறுவதற்கு செவிமடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்
ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவை குறித்து எடுத்துக்காட்டிய கர்தினால் Czerny அவர்கள், அதன் செயல்முறையானது, சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுடனும் இணைந்து தொடங்ககப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்