தேடுதல்

 நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில்  மீட்புப்படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்படையினர்  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோருக்கு இந்நிலநடுக்கம் துயரத்திற்குள் ஒரு துயரம்

இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகும் கூட மக்கள் திருபலிக் கொண்டாட்டங்களிலும் இறைவேண்டல்களிலும் : ஆயர் Bizzatti

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

துருக்கி, சிரியா நிலநடுக்கங்களால் அதிகமான இழப்புகளைச் சந்தித்திருப்பது ஏழைமக்கள்தாம் என்று தனது கவலையை பதிவுசெய்துள்ளார் துருக்கியின் ஆயர் Paolo Bizzatti.

மக்கள் தெருக்களில், பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் உறங்குவதைப் பற்றிய கூறும் அறிக்கைகள் உண்மை என்பதை உறுதிப்படுத்திய ஆயர் Bizzatti அவர்கள், தங்குமிடம் உள்ளவர்களும் கூட மின்சாரம் அல்லது தண்ணீர் இல்லாமல் அவதிக்குள்ளாவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகள் அவசர நிலைகளை எதிர்கொண்டு வருவதாக Osservatore Romano என்ற பத்திரிகைக்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ள ஆயர் Bizzatti அவர்கள், கடுமையான சிரமங்கள் மத்தியிலும், மக்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோரை பொறுத்தவரை "இது ஒரு துயரத்திற்குள் ஒரு துயரம்" என்றும், மக்களிடம் காணப்பட்ட சிறிய நம்பிக்கை இப்போது திடீரென்று தொலைந்து போனதாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ள ஆயர் Bizzatti அவர்கள், இந்நிலையிலும், பாதிக்கப்பட்டோருக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க முன்வரும் காரித்தாஸ் அமைப்பிற்குப் பெருமளவு ஆதரவு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தப் பெரும்துயர் நேரத்திலும், கடவுள் எங்களுடன் உடனிருக்கின்றார் என்ற மக்களின் நம்பிக்கைக்காக தான் இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும், இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகும் கூட திருபலிக் கொண்டாட்டங்களிலும் இறைவேண்டல்களிலும் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு  வருகின்றனர் என்றும் அவர்களின் நம்பிக்கை பெரும் உதவியாக உள்ளது என்றும் கூறியுள்ளார் ஆயர் Bizzatti

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2023, 14:42