தடம் தந்த தகைமை – கொப்புளங்களால் பாதிக்கப்பட்ட எகிப்தியர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பார்வோன் மன்னன் ஆண்டவரை வழிபட இஸ்ரயேல் மக்களுக்கு அனுமதி கொடுக்காததால் எகிப்திய மக்கள் மேல் கொள்ளை நோய்களை ஆண்டவர் வரச் செய்தார். ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும். எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்” என்றார். அவர்களும் ஆண்டவர் கூறியவாறே அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள் மேலும் அச்சாம்பல் பட்டு வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறியது. எல்லா மக்கள் மீதும் எகிப்திய மந்திரவாதிகள் மேலும் கொப்புளங்கள் தோன்றியதால் அவர்களால் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. இருப்பினும் பார்வோன் இதனைக் கண்டு மனம் இரங்கவில்லை. ஆண்டவர் பார்வோனின் மனத்தை மேலும் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவன் அவர்களுக்கு செவிசாய்க்கவில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்