தேடுதல்

கால்நடைகளை இழந்து தவிக்கும் எகிப்தியர் கால்நடைகளை இழந்து தவிக்கும் எகிப்தியர்  

தடம் தந்த தகைமை – கால்நடைகளை இழந்த எகிப்தியர்

இஸ்ரயேல் மக்களுக்குரிய கால்நடைகளில் எவையுமே மடிந்துபோகவில்லை. மாறாக எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்து போயின.

மெரினா ராஜ் வத்திக்கான்

இஸ்ரயேல் மக்களை அனுப்ப பார்வோன் மன்னன் மனம் இரங்காததால் மீண்டும் ஆண்டவர் மோசேயை பார்வோனிடம் போகச் சொன்னார். பார்வோனிடம் சென்று எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால் நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது என்று சொல் என்றார். மோசேயும் ஆரோனும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பார்வோன் மன்னனிடம் சென்று கூறினர். பார்வோன் மன்னன் ஆண்டவருடைய குரலுக்கு செவிசாய்க்க மறுத்ததால்,  ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டினார். எகிப்தியர் கால்நடைகளின் மேல்  கொள்ளை நோயை வரச்செய்து அவற்றைக் கொன்றழித்தார். இஸ்ரயேல் மக்களுக்குரிய கால்நடைகளில் எவையுமே மடிந்துபோகவில்லை. மாறாக எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்து போயின. இதனைக் கண்ட பார்வோன் ஆளனுப்பி இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை என்பதை அறிந்து உறுதி செய்து கொண்டான். ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. இஸ்ரயேல் மக்களை அவன் போகவிடவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2023, 12:16