தேடுதல்

வெட்டுக்கிளிகள் வானில் வெட்டுக்கிளிகள் வானில் 

தடம் தந்த தகைமை - வெட்டுக்கிளிகளை விரட்டிய ஆண்டவர்

ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில் வீசியெறிந்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பார்வோன் மன்னன் இஸ்ரயேல் மக்களை அனுப்ப மறுத்ததால், எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகளை ஆண்டவர் வரவழைத்தார். கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிட்டன. எகிப்து நாடெங்கும் மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருந்தது. இதனால் கவலையடைந்த பார்வோன் மன்னன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் நான் தவறு செய்து விட்டேன் என்று மனம் வருந்தினான். இந்த ஒருமுறையும் என் பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று மன்றாடினான். மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரை நோக்கி மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில் வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை. ஆனால் பார்வோன் மன்னன் மனத்தை ஆண்டவர் இறுகிப்போகச் செய்ததால் அவன் இஸ்ரயேல் மக்களைப் போக அனுமதிக்கவில்லை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2023, 12:06