தடம் தந்த தகைமை – மகனை இழந்த யாக்கோபின் துக்கம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்ட சகோதரர்கள், ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர். அழகு வேலைப்பாடு நிறைந்த அந்த அங்கியைத் தம் தந்தையிடம் எடுத்துச் சென்று, “இதை வழியில் கண்டோம். இது உங்கள் மகனது அங்கியா என்று பாருங்கள்” என்றனர். தந்தை அதை அடையாளம் கண்டு, “இது என் மகனது அங்கியே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது! ஐயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டுப் போனானே!” என்று நினைத்து, தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு பல நாள்களாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினார். அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர். அவரோ எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவிகொடாமல், “நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்” என்று அவருக்காக அழுது புலம்பினார். இதற்கிடையில் மிதியானியர் எகிப்தை அடைந்து பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்