தேடுதல்

பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் தமிழர்கள் 

தமிழர்களின் தைப்பொங்கல் விழா சிறப்புரை - அருள்பணி முனைவர் விமல்

தை மகளே வருக, துணிவைத்தருக, உன்னையே உயிர் மூச்சாய், உழைப்பாய், உயர்வாய் ஊதியமாய் பார்க்கும் உழவர்கள் சிறக்க அருள்தருக
அருள்பணி முனைவர் விமல் - சேலம் மறைமாவட்டம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தைத்திங்கள் முதல் நாளில் கதிரவனை வணங்கி நிலத்தில் விளைந்த விளைபொருட்களுக்காய் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் மங்கள நாள் பொங்கல் திருநாள். தை மகளே வருக, துணிவைத் தருக,  உன்னையே உயிர் மூச்சாய், உழைப்பாய், உயர்வாய், ஊதியமாய்ப் பார்க்கும் உழவர்கள் சிறக்க அருள்தருக என்று மகிழ்வுடன் காத்திருக்கும் நமக்கு, பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்த வருகின்றார் அருள்பணி முனைவர் விமல் அவர்கள்.

சேலம் மறைமாவட்ட  அருள்பணியாளர் முனைவர் விமல் அவர்களின் தந்தை  எதை நான் தருவேன் பாடலை எழுதிய வேதியர் ஜெகநாதன் அவர்கள். தாயார் ஸ்டெல்லா மேரி இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றவர். பெங்களூர் புனித பேதுரு குருத்துவக்கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியலில் முதல்தர தேர்ச்சியும், சென்னை லொயோலா கல்லூரியில் (Msc Visual communication) காட்சித்தகவலியல் தங்கப்பதக்கமும் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தமிழக ஆயர் பேரவை ஊடகப்பணிக்குழுவின் சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். தமிழ்நாட்டின் மாதா தொலைக்காட்சி உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது மட்டுமல்லாமல், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராகவும், 4 ஆண்டுகள் அப்பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.. அன்புள்ள சீடனுக்கு என்ற எல்லாருக்கும் பரிச்சையமான பாடல் உட்பட, 50க்கும் மேற்பட்ட பாடல்களையும் 4 புத்தகங்கள், மற்றும் 1 நாவலையும் எழுதியுள்ளார். பல்வேறு கருத்தரங்குகளில் 12 கட்டுரைகள் படைத்தளித்த அருள்பணி விமல் அவர்கள், தற்போது சேலம் மறைமாவட்டத்தின் மாமன்றத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2023, 11:10