தேடுதல்

திருத்தந்தையுடன் பேராயர் Ettore Balestrero திருத்தந்தையுடன் பேராயர் Ettore Balestrero 

திருத்தந்தையின் திருப்பயணம் துயருறுவோருக்கு ஆறுதல்....

துயரமான சம்பவங்கள் மத்தியில் நம்பிக்கையின் அடையாளங்களும் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களிடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு காணப்படுகின்றது : காங்கோவிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ettore Balestrero

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் அமைதிக்கான திருத்தூதுப் பயணமானது, அம்மக்களுக்கு ஆறுதலையும், இரத்தம் சிந்தி துயருற்றுக்கொண்டிருக்கும் அவர்களின் காயங்களுக்குக் குணப்படுத்துதலையும் வழங்கட்டும் என்று வத்திக்கான் செய்திக்கு கூறியுள்ளார் அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ettore Balestrero.

ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் Kasindi-விலுள்ள பெந்தக்கோஸ்து வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலில் அப்பாவி மக்கள் 14 பேர் உயிரிழந்தும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள வேளையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பேராயர் Balestrero

அதேநாளில் Beni-யிலுள்ள Kivu நகரின் சந்தை பகுதியில் நிகழ்ந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலையும் எடுத்துக்காட்டி தனது கவலையை பதிவு செய்துள்ள பேராயர் Balestrero அவர்கள், நிகழ்ந்துள்ள இத்தாக்குதல் தொடர்ந்து நாட்டை பலவீனப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவளையில், இப்படிப்பட்டத் துயரமான சம்பவங்கள் மத்தியிலும் நம்பிக்கையின் அடையாளம் காணப்படுகின்றது என்றும், நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களிடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ள பேராயர்  Balestrero அவர்கள், நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள இயற்கை வளமே இந்த மோதல்களுக்கு அடிப்படைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டுவதில் பல்வேறு கிறிஸ்தவ சமூகங்கள் ஒன்றுபட்டுள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

எதிர்வரும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்திற்கான பாதுகாப்பையும் பொது ஒழுங்கையும் உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சி மகத்தானது என்று கூறியுள்ள பேராயர் Balestrero அவர்கள், இறைநம்பிக்கை இல்லாதவர்களிடம் இறைநம்பிக்கையை ஏற்படுத்தவும், இறைநம்பிக்கை கொண்டிருப்போரிடம் அதனை இன்னும் ஆழப்படுத்தவும் இந்தப் பயணம் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2023, 12:55