தேடுதல்

யாக்கோபின் மனைவியர் லெயாவும் ராக்கேலும் யாக்கோபின் மனைவியர் லெயாவும் ராக்கேலும் 

தடம் தந்த தகைமை – இரு சகோதரிகளை மணந்த யாக்கோபு

இளைய மகளைத் திருமணம் செய்துத் தருவதாக வாக்குறுதியளித்து, மூத்த மகளை கொடுத்து ஏமாற்றிய லாபானை நோக்கி யாக்கோபு, என்னை ஏமாற்றியது ஏன் எனக் கேட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இளைய மகளைத் திருமணம் செய்துத் தருவதாக வாக்குறுதியளித்து, மூத்த மகளை கொடுத்து ஏமாற்றிய லாபானை நோக்கி யாக்கோபு, என்னை ஏமாற்றியது ஏன் எனக்கேட்டார். அதற்கு லாபான்: “மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை. ஆகையால், நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்” என்றான். அவ்வாறே, யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார். அதன் பின், லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான். லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான். யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார். அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார். லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.

லேயாவுக்கோ நான்கு ஆண் குழந்தைகள் பிறக்க, ராகேலோ மலடியாகவே இருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2023, 13:32