தேடுதல்

ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

கோவாவில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கு எதிராக....

கிறிஸ்தவ கல்வி வளாகங்களில் இந்து ஆதரவு கருத்தியலை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதே வகுப்புவாதத்தின் நோக்கம் : அருள்பணியாளர் Silva

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கோவாவில் மாநில மற்றும் கூட்டாட்சி நிலையில் ஆளும் இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சியின் (BJP) ஆதரவுடன்,  கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் மேலும் மேலும் வகுப்புவாதமயமாகி வருகின்றன என்று கூறியுள்ளார் புனித சேவியர் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் Anthony Da Silva

கிறிஸ்தவக் கல்வி வளாகங்களில் இந்து ஆதரவு கருத்தியலை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ள அருள்பணியாளர் Silva அவர்கள், BJP-யின் மாணவர் பிரிவைச் சேர்ந்த சிலர் ஆலயத்தில் இயங்கிவரும் புனித சேவியர் கல்லூரியில் சுலோகங்களை எழுப்பி வகுப்புகளை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்திய சமீபத்திய நிகழ்வையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

60 ஆண்டுகால பழமையான கல்லூரியில் இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்று கவலை தெரிவித்துள்ள இக்கல்லூரியின் நிர்வாகியான அருள்பணியாளர் Tony Salema அவர்கள், போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் கோரிக்கைகளுக்கு கட்டுப்படாத நிலையில் துணை ஆட்சியரின் உதவியோடுதான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்றும் விளக்கியுள்ளார்.

டிசம்பரில் நடைபெற்ற 2022-23. கல்வியாண்டுக்கான கவுன்சில் தேர்தலில் இந்து ஆதரவு மாணவர் பிரிவு வெற்றி பெற்றதையடுத்து, புதிய மாணவர் பேரவையை கல்லூரியில் சேர்க்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததை கண்டித்து ABVP (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) மன்றத்தின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் 450 ஆண்டுகால போர்த்துகீசிய ஆட்சி முடிவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1963-இல் நிறுவப்பட்ட இந்தக் கல்லூரியில் தற்போது 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். (UCA)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 13:24