திருப்பலியின் போது கர்தினால் மால்கம் இரஞ்சித் திருப்பலியின் போது கர்தினால் மால்கம் இரஞ்சித்   (AFP or licensors)

இலங்கை மக்கள் தங்கள் நாட்டை அன்புகூரவேண்டிய ஆண்டு இது

இப்புத்தாண்டில் ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை வெளியிடுவோம் - கர்தினால் மால்கம் இரஞ்சித்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உடன்பிறந்த உணர்வுடன் குடிமக்கள் அனைவருடனும் இணைந்து இப்புத்தாண்டில் ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.

75ஆம் சுதந்திரத் தினத்தை சிறப்பிக்கவுள்ள இவ்வாண்டில், எத்தனை பொருளாதார சிக்கல்கள் இருப்பினும் நம்மால் நம் நாட்டை மேலும் அதிகம் அதிகமாக அன்புகூரமுடியும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுச் செயல்படுவோம் என கூறியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித்.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்துவந்துள்ள நிலையில் இன்றைய உலகின் அடிமைகளாக மாறியுள்ள இலங்கை குடிமக்கள், இன்றைய அமைப்புமுறைகளை இப்படியே தொடர அனுமதித்தால் அது நாட்டின் பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை எடுத்துரைத்த கர்தினால், நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொணர்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை வலியுறுத்தினார்.

இலங்கையோடு சுதந்திரம்பெற்ற பல நாடுகள் பெரிய அளவில் வளர்ச்சியைக் கண்டுவரும் சூழலில், இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் கர்தினால் மால்கம்.

நாட்டுத் தலைவர்களின் தவறானக் கொள்கைகளால் இலங்கை நாடு ஆசியாவின் ஏழை நாடுகளுள் ஒன்றாக மாறியுள்ளது என்ற கவலையையும் வெளியிட்ட கொழும்பு கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டை அன்புகூரவேண்டிய ஆண்டு இது என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2023, 14:06