தேடுதல்

யாக்கோபு தன் திருமணம் குறித்து மாமன் லாபானுடன் உரையாடல் யாக்கோபு தன் திருமணம் குறித்து மாமன் லாபானுடன் உரையாடல் 

தடம் தந்த தகைமை - ஏமாற்றி நடந்த திருமணம்

யாக்கோபோ, லாபானின் இளைய மகள் ராகேலை விரும்பியிருக்க, லானானோ, மூத்த மகள் லேயாவை முதலிரவு அறைக்குள் அனுப்பி, யாக்கோபை ஏமாற்றினான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தன் மூத்த மகன் ஏசா, இளைய மகன் யாக்கோபை கொன்றுவிடுவான் என பயந்த ரெபேக்கா, தன் சகோதரன் லாபான் வீட்டுக்கு யாக்கோபை அனுப்பி வைத்தார்.

லாபான் யாக்கோபை நோக்கி, “நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்” என்றான். லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயா; இளையவள் பெயர் ராகேல். ஆனால், லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள். யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், “உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்” என்றார். அதற்கு லாபான், “அவளை அந்நியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு” என்றான். அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஏழாண்டுகள் கடந்தபின்னர், லாபான் அவ்வூர் மக்கள் அனைவரையும் அழைத்துத் திருமண விருந்தளித்தான். ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் முதலிரவு அறைக்குள் அனுப்பி, யாக்கோபை ஏமாற்றினான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2023, 11:21