தேடுதல்

தந்தையின் ஆசீரைப் பெற முடியாமல் கூக்குரலிடும் மூத்த மகன் ஏசா தந்தையின் ஆசீரைப் பெற முடியாமல் கூக்குரலிடும் மூத்த மகன் ஏசா 

தடம் தந்த தகைமை - ஏசா ஈசாக்கிடம் ஆசி வேண்டல்

யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான், என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான் ஏசா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கண்பார்வையற்றிருந்த தன் தந்தை ஈசாக்கை ஏமாற்றி, யாக்கோபு ஆசீரைப்பெற்ற பின்னர் உடனே விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான். அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, “என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக” என்றான். அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி, “நீ யார்” என, அவன்: “நான் தான் உங்கள் தலைப்பேறான மகன் ஏசா” என்றான். ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி “அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்” என்றார். ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான். அவன் தன் தந்தையை நோக்கி, “அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்” என்றான். அதற்கு அவர்; “உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்” என்றார். அதைக் கேட்ட ஏசா, “யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்” என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2023, 10:21