தடம் தந்த தகைமை - இறைவனோடு உரையாடியவர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தீய வாழ்வு வாழ்ந்த சோதோம் நகரை ஆண்டவர் அழிக்க விரும்பியபோது, ஆபிரகாம் ஆண்டவரை அணுகி, தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?, எனக் கேட்கிறார். அதற்கு ஆண்டவர், நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன், என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன், என்றார். மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்? என்று கேட்க, ஆண்டவர், நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன், என்றார். அப்பொழுது ஆபிரகாம், ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, ஆண்டவரும், முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன், என்று பதிலளித்தார். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்? என, அதற்கு ஆண்டவர், இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன், என்றார். அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, ஆண்டவர், அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன், என்றார். இவ்வாறு சோதோம் நகரை அழிவிலிருந்து காப்பாற்ற இறைவனோடு வாதாடியவர் ஆபிரகாம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்