தேடுதல்

எரியும் முட்புதரிலிருந்து மோசேவுடன் பேசும் கடவுள் எரியும் முட்புதரிலிருந்து மோசேவுடன் பேசும் கடவுள்  

தடம் தந்த தகைமை : 'துயருறும் மக்களின் கடவுள்'!

நம் இறைத்தந்தை துயருறும் மக்களின் கடவுள். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக அறச்சினம் கொண்டு அவர்களின் சார்பாகப் போராடுபவர்..

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவர் மோசேயிடம், "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே, எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே, இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்று கூறினார்.

“இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை கேட்டால் அவர்களுக்கு நான் என்ன பதில்மொழி சொல்வேன்?” என்று கடவுளிடம் கேட்டார் மோசே. அதற்குக் கடவுள், “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றும்,  ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று அவர்களிடம் சொல்” என்றும் கூறினார். மேலும், “நீ இஸ்ரயேல் மக்களிடம், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்றும் சொல்” என்றார்.  

“நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் சென்று, எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார் என்றும், இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் பயணம் மேற்கொண்டு எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்’ எனவும் சொல்லுங்கள்" என்றும் கூறினார். மேலும், என் கைவன்மையை கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின், அவன் உங்களை அனுப்பிவிடுவான்” என்றும் மோசேயிடம் கூறினார் கடவுள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 12:39