அநீதிகளுக்கு எதிராக வன்முறையற்ற வழிகளில் போராடுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மார்டின் லூதர் கிங் ஜூனியர் நாள் ஜனவரி 16, திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், இனப்பாகுபாடுகளுடன் நடத்தப்படுவது நாட்டில் ஒழிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர்.
இனத்தின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Timothy Broglio அவர்கள், ஜனவரி 16ம் தேதியன்று மார்ட்டின் லூதர் கிங்கின் 94ஆம் வயதை நாம் சிறப்பிக்கும் வேளையில், இனப்பாகுபாட்டு அநீதிகளுக்கு எதிராக வன்முறையற்ற வழிகளில் அவர் போராடியதை நினைவுகூர்வோம் என கேட்டுள்ளார்.
எனக்கு கனவு ஒன்று உண்டு, என மார்ட்டின் லூதர் அவர்கள் வழங்கிய புகழ்வாய்ந்த உரையின் 60 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள இவ்வேளையில், இனப்பாகுபாட்டு நிலைகளை அகற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டும் அதேவேளை, இன்னும் பெரிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதையும் அமெரிக்க ஆயர்கள் நினைவூட்ட விரும்புவதாக பேராயர் Broglio தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்